தமிழ்
中文(简体)
中文(繁體)
Ελληνικά
हिंदी
Italiano
한국어
Polski
Português
ਪੰਜਾਬੀ
Tagalog
தமிழ்
ஒரு குழு சாராத நிறுவனம் என்ற வகையில், அனைத்து சமயத்தவர்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் கலாசாரங்களுக்கும் அன்புமிகு பராமரிப்பும் சேவைகளும் வழங்கின்றோம். நீங்கள் சம்பிரதாய பூர்வமான மரணச் சடங்கொன்றை அல்லது ஞாபகார்த்தச் சேவையொன்றை முன் கூட்டித் திட்டமிடுவதாயின், நாங்கள் உங்கள் குடும்பத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன் உங்கள் அன்புக்குரியவரின் வாழ்க்கையை நன்றியுடன் நினைவு கூர்வதற்கான சேவைகளையும் வழங்குகின்றோம்.
எமது தொழில்சார் அணி, பன்மைக் கலாசாரம் கொண்டதாக உள்ளது. இதன் கருத்து உங்கள் குடும்பத்தவர்களால் உங்கள் தனித்துவமான கலாசாரத் தேவைகளைப் புரிந்துகொள்ளும் ஒருவர் மூலம் நீங்கள் தெரிவு செய்யும் மொழியில் ஏற்பாடுகளை செய்ய முடியும் என்பதாகும்.
எமது சேவையைப் பெறும் பல்வேறுபட்ட சமுதாயங்கள் சம்பிரதாயங்களுக்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம். உங்கள் குடும்பம் வழியனுப்புகின்ற போது இந்த விசேடமான கலாசாரங்கள் பேணப்படுவதை உறுதிப்படுத்தும் விரிவான உற்பத்திகளையும் சேவைகளையும் நாங்கள் வழங்குகின்றோம். எமது இலக்கு: ஒவ்வொரு ஆளுக்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பராமரிப்பு, இரக்கம் மற்றும் விருப்பத் தெரிவு என்பவற்றை வழங்குவதாகும்.
முன்கூட்டிய திட்டமிடல்:
உங்கள் குடும்பத்தவர்கள் அழுத்தம் நிறைந்த சந்தர்ப்பங்களில் கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக மரணச் சடங்கு மற்றும் தகனக் கிரியை ஏற்பாடுகளை முன்கூட்டித் திட்டமிடுதல். இது எதிர்பாராத செலவுகளும் நிதி நெருக்கடிகளும் ஏற்படுவதிலிருந்து உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கும். நாங்கள் அனைத்து வகையான வழக்காறுகளையும், சமயம் சார்ந்த மற்றும் சமயம் சாராத சம்பிரதாயங்களையும் உங்கள் குடும்பத்தின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப வடிவமைப்பதற்கான வசதி ஏற்பாடுகளுக்கும் உதவுகின்றோம்.சம்பிரதாய பூர்வமான மரணச் சடங்குகளும் முழுமையான தகனக் கிரியைத் தெரிவுகளும்:
நாங்கள் பார்வையிடுதல், தகனக் கிரியைகளை அருகிலிருந்து பார்ப்பதற்கான வசதிகள், அஸ்தியைப் பாதுகாத்தல் உள்ளிட்ட உங்கள் சம்பிரதாயத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்றோம். மேலும், எமது ஊழியர்களால் தலை மறைப்புக்கள், சப்பாத்து இறாக்கைகள் என்பன போன்ற ஏனைய சம்பிரதாய மற்றும் சமயத் தேவைகளையும் ஏற்பாடு செய்ய முடியும்.சந்திப்பு நேரமொன்றைக் கோருவதற்கு தயவு செய்து இங்கேக்ளிக் செய்யவும்.
எமது மயான மற்றும் மரணச் சடங்கு நிலைய அமைவிடங்களையும் கிடைக்கக்கூடிய வசதிகளையும் அறிந்து கொள்ளவதற்கு பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.
அமைவிடம்அமைவிடம் |
நகரம் |
மயானம் |
மரணச் சடங்கு நிலையம் |
தகனக் கிரியை நிலையம் |
தகனக் கிரியைகளை அருகிலிருந்து பார்ப்பதற்கான பிரதேசம் |
Beechwood Cemetery |
Vaughan |
● |
|
|
|
Duffin Meadows Cemetery |
Pickering |
● |
|
|
|
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres |
Richmond Hill |
● |
● |
● |
● |
Meadowvale Cemetery, Cremation and Funeral Centres |
Brampton |
● |
● |
● |
● |
Mount Pleasant Cemetery, Cremation and Funeral Centres |
Toronto |
● |
● |
● |
● |
Pine Hills Cemetery and Funeral Centres |
Scarborough |
● |
● |
|
|
Prospect Cemetery |
Toronto |
● |
|
|
|
Thornton Cemetery, Cremation and Funeral Centres |
Oshawa |
● |
● |
● |
● |
Toronto Necropolis Cemetery |
Toronto |
● |
|
|
|
York Cemetery and Funeral Centre |
North York |
● |
● |
|
|
The Simple Alternative Funeral Centre |
Mississauga |
|
● |
|
|
The Simple Alternative Funeral Centre |
Pickering |
|
● |
|
|
The Simple Alternative Funeral Centre |
Toronto |
|
● |
|
|